இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டேன் நான்
இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டேன்
எதற்கும் பயம் இல்லையே
இனியும் கவலை எனக்கில்லையே

அல்லேலூயா – 4

 

1.

இயேசுவுக்காய் அவமானம் ஏற்றுக் கொண்டேன்

இனிவரும் பலன் மேல் நோக்கமானேன்

அழிந்து போகும் பாராட்டு வேண்டாமே

அரவணைக்கும் இயேசு போதும் போதுமே  – இயேசுவின்

2.

அதிவிரைவில் நீங்கும் இந்த உபத்திரவம்
அதிகமான கனமகிமை உண்டாக்கும்
காண்கின்ற எல்லாமே அநித்தியம்
காணாதவைகளோ நித்தியம்    – இயேசுவின்
3.

பகைவர்க்கு அன்பு காட்டிடுவேன்
வெறுப்பவர்க்கு நன்மை செய்திடுவேன்
சபிப்பவர்க்கு ஆசி கூறிடுவேன்
தூற்றுவோருக்காக ஜெபித்திடுவேன்  – இயேசுவின்

4.

கர்த்தரையே முன் வைத்து ஓடுகிறேன்
கடும்புயல் வந்தாலும் அசைவதில்லையே
எதையும் தாங்கிடுவேன் இயேசுவுக்காய்
இனியும் சோர்ந்து போவதில்லையே    – இயேசுவின்

5.

ஆட்கொண்ட‌ தேவ‌னை ந‌ம்புகிறேன்

அவ‌ருக்குள் வேர் கொண்டு வ‌ள‌ருகிறேன்

கோடைக்கால‌ம் வ‌ந்தாலும் அச்ச‌மில்லையே

வற‌ட்சி கால‌ம் வ‌ந்தாலும் கவ‌லையில்லையே  – இயேசுவின்
6.

வேதத்தில் இன்பம் காண்கின்றேன்
விரும்பி தியானம் செய்கின்றேன்
வாய்க்காலில் நடப்பட்ட மரம் நான்
வாழ்க்கையெல்லாம் தவறாமல் கனி கொடுப்பேன் – இயேசுவின்



iyesuvin karangkalaib parrik konden nan
iyesuvin karangkalaib parrik konden
edharkum payam illaiye
iniyum kavalai enakkillaiye

alleluya – 4

 

1.

iyesuvukkay avamanam eerruk konden

inivarum palan mel nokkamanen

azinththu bokum baraddu vendame

aravanaikkum iyesu bothum bothume  – iyesuvin

2.

athiviraivil ningkum inthdha upaththiravam
athikamana kanamakimai undakkum
kankinra ellame a niththiyam
kanadhavaikalo niththiyam    – iyesuvin
3.

pakaivarkku anbu kaddiduven
verubpavarkku nanmai seythiduven
chabibpavarkku aasi kuriduven
thurruvorukkaka jaெbiththiduven  – iyesuvin

4.

karthdharaiye mun vaiththu oodukiren
kadumbuyal vanththalum asaivathillaiye
ethaiyum thangkiduven iyesuvukkay
iniyum sornththu bovathillaiye    – iyesuvin

5.

aadkonta‌ theva‌nai na‌mbukiren

ava‌rukkul ver kondu va‌la‌rukiren

kodaikkala‌m va‌nththalum ascha‌millaiye

vara‌dsi kala‌m va‌nththalum kava‌laiyillaiye  – iyesuvin
6.

vedhaththil inpam kankinren
virumbi thiyanam seykinren
vaykkalil natabpadta maram nan
vazkkaiyellam dhavaramal kani kodubben – iyesuvin